தொழிலதிபர் டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார்.
அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார்.
இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார்.
இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.
அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார்.
மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார்.
அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.
பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.
பேனா மறதியை பற்றி விசாரித்தார்.
அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே.
நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்...
1. உடலை மதித்து உணர்ந்து வாழ்ந்தால் சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.
2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.
3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் மட்டும் செய்வோம்.
4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்கவே மாட்டோம்.*
5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.
6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் நிம்மதியுடன் வாழ்வோம்.
#விருப்பமும்_மதிப்புமில்லாமல்செய்யப்படும்எந்தஒருசெயலும்வெற்றிபெறுவதில்லை.
#ஒருசெயலைசெய்யும்முன்பேஆலோசனைசெய்யுங்கள்_வெற்றிபெறுங்கள்___________
#வாழ்க்கையைநிம்மதியாகவாழ்ந்துவிடுங்கள்..
No comments:
Post a Comment