விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்......
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும்.....அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும்.
ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் தங்கி கீழே பூமியில் இறங்கும்.
அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.
அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும்.
சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் தேவையை தீர்க்கும்.
இந்த விபரத்தினை
அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள் நண்பர்களே..... நல்லது நடக்கட்டும்...
நன்றி.
No comments:
Post a Comment