Search This Blog

Saturday, September 3, 2016

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

அழிக்க முடியாத உறவு
       " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்உ டனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா,
அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது
தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு
வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித
முன் தொடுப்பும் இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப்
உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை
எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக
மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா
வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல
கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும்
தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது
குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது
வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும்
தாய்மாமனே முன்னிற்பான்.
தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக
உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு
அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே
போகலாம்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை
அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக
தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக
வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால்
என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.
எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ
அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின்
மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான்
கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால்
அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய்
மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை
தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை
கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன்
அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று
அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை
காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும்
அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம்
தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து
மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன
உண்மை...
நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து
இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு
விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட
நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு
கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த
தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க
அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது
அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம்
தெரிந்தது.
நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம்
நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம்
தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம்
குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க
வேண்டும் என்பது என் ஆவா. . .

No comments:

Post a Comment