Search This Blog

Sunday, September 18, 2016

Check ur presence of mind...

Check ur presence of mind.............Take d test.

relax, clear your mind and begin, what's the 1st answer that comes to ur mind???...........

1. What do you put in a toaster?












Answer:
"bread." If you said "toast," give up now and do something else.. Try not to hurt yourself. If you said bread, go to Question 2



2. Say "silk" five times. Now spell "silk." What do cows drink?









Answer:
Cows drink water. If you said "milk," don't attempt the next question.
Your brain is over -stressed and may even overheat. Content yourself by reading more appropriate literature such as Auto World. However, if you said "water", proceed to question 3...

3. If a red house is made from red bricks and a blue house is made from blue bricks and a pink house is made from pink bricks and a black house is made from black bricks, what is a
green house made from?












Answer:
Greenhouses are made from glass. If you said "green bricks," why are you still reading these?? If you said "glass," go on to Question 4.


4. It's twenty years ago, and a plane crashes from 20,000 feet over Germany (If you will recall, Germany at the time was politically divided into East and West Germany) Where would you bury the survivors? East Germany, West Germany, "no
man's land"?








Answer: You don't bury survivors!!! If you said ANYTHING else, you must stop. If you said, "You don't bury survivors", proceed to the next question.


5. Without using a calculator - You are driving a bus from Mumbai to Pune. In Mumbai , 17 people get on, in Pune , 16 get off. Name the driver.












Answer: Oh, for crying out loud! Don't you remember your own name? It was YOU!!

😊

Try it seriously dont cheat its amazing
A MUST TRY!!!!!!!          ALZHEIMERS'  EYE TEST

(I love this part.. It's absolutely amazing!)  

Count every  "  F  " in the following text:

FINISHED  FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED  WITH
THE EXPERIENCE OF YEARS... 
(SEE  BELOW)

HOW MANY ?
 
3....4....

WRONG,  THERE ARE  6  --  no joke.
READ IT AGAIN !
Really, go Back and Try to find the  6 F's before you scroll down.

The reasoning behind is  further down.

The brain cannot  process "OF".

Incredible  or what? Go back and look again!!

Anyone who counts  all 6 "F's" on the first go is a genius.

Three  is normal, four is quite rare.

Send this to your  friends.
It will drive them crazy!!:

👍👍👍

Sunday, September 4, 2016

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் ?

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்......

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும்.....அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும்.

ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் தங்கி கீழே பூமியில் இறங்கும்.

அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.

அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும்.

சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் தேவையை தீர்க்கும்.

இந்த விபரத்தினை
அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள் நண்பர்களே..... நல்லது நடக்கட்டும்...

நன்றி.

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் ?

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்......

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும்.....அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும்.

ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் தங்கி கீழே பூமியில் இறங்கும்.

அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.

அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும்.

சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் தேவையை தீர்க்கும்.

இந்த விபரத்தினை
அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள் நண்பர்களே..... நல்லது நடக்கட்டும்...

நன்றி.

வாழ்க்கை

தொழிலதிபர் டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார்.

அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார்.

இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார்.

இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார்.

மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார்.

அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.

பேனா மறதியை பற்றி விசாரித்தார்.

அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே.

நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்...

1. உடலை மதித்து உணர்ந்து வாழ்ந்தால் சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் மட்டும் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்கவே மாட்டோம்.*

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் நிம்மதியுடன் வாழ்வோம்.

#விருப்பமும்_மதிப்புமில்லாமல்செய்யப்படும்எந்தஒருசெயலும்வெற்றிபெறுவதில்லை.

#ஒருசெயலைசெய்யும்முன்பேஆலோசனைசெய்யுங்கள்_வெற்றிபெறுங்கள்___________
#வாழ்க்கையைநிம்மதியாகவாழ்ந்துவிடுங்கள்..

Saturday, September 3, 2016

அன்பு உலகை ஆளும்

*ஒரு குட்டி கதை:*
🔐🔨

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. "உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி"?
அதற்கு சாவி சொன்னது. "நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்." என்றதாம்.
❤❤❤❤❤❤❤❤❤
*அன்பு உலகை ஆளும்.*

உழவா ? அழிவா ?

உழவா...? அழிவா..?
இன்றைய விவசாயிகள் நிலை
----------------------------------

விவசாயம்-
வேரோடு சாயுது!
விவசாயி-
கண்கள் எல்லாம்
ஆறாகப் பாயுது!

ஏரும் இல்லை
எருதும் இல்லை;
ஏரோட்ட-
எவரும் இல்லை!

நீரோட்டப் பூமியிலே
பயிரிட்டுப்-
பயனும் இல்லை!

காசு, பண ஆசையாலே
பலர்-
காரோட்டச்
சென்றுவிட்டார்!

நெல் நட்ட
நிலத்தை எல்லாம்
கல் நட்டி
விற்றுவிட்டார்!

'கான் கிரீட்'
கலவை ஊற்றி
அதில்-
கட்டிடங்கள்
வளர்த்து விட்டார்!

ஆறுகளை
அள்ளுகிறார்;
மலைகளைக்
கிள்ளுகிறார்!

இயற்கை வளங்களை
கொள்ளையிட்டு
செல்லுகிறார்!

ஏரி, குளங்களை
இல்லாமலே
செய்கிறார்!

ஆறு, நதிகளை
இணைப்பதாகச்
சொல்லுகிறார்!

வெறும் வாயினாலே
அவலினை
மெல்லுகிறார்!

அண்டை நாட்டார்
சண்டையிட்டு
தண்ணீர்தர
மறுக்கிறார்!

தமிழ் நாட்டார்
கவலையற்று
'தண்ணீரில்'
மிதக்கிறார்!

வேலைக்கே-
போக வேண்டாம்
விலையில்லா
அரிசி உண்டு!
சோம்பேறி ஆகிட்டார்!

வேலைக்கே போனாலும்
வேலையே-
செய்ய வேண்டாம்!
விழலுக்கு இறைத்துவிட்டார்!

நூறுநாள் திட்டம்;
அத்தனையும் நட்டம்!

பெருகாத குளங்களை
தூர் வாருகின்றார்!
உடல் நோகாமலே
நிழலில்-
இளைப்பாறு கின்றார்!

விவசாய வேலைக்கு
ஆள் கிடைப்பதில்லை!
விளைந்தாலும் உழவர்க்கு
விலை கிடைப்பதில்லை!

"ஊருக்கு உழைத்துழைத்து
எதைத்தான் கண்டோம்?
உடுத்தவோர் உடையின்றி
தெருவிலே நின்றோம்!
விவசாய குடும்பத்தில்
ஏன்தான் பிறந்தோம்?
வேதனைகள் மட்டுமே
முதுகில் சுமந்தோம்!"

கடன்-
சோதனைகள்
துரத்துவதால்
புலம்புகின்றார்!

தாலி, நூலை
விற்கின்றார்!
தன்மானம்-
விற்க அஞ்சி
தற்கொலையும்
செய்கின்றார்!

விவசாயம்
முதுகெலும்பு;
விவசாயி
விலா எலும்பு!
வாய்கிழிய பேசுதற்கு
வேண்டாமா ஓர்வரம்பு?

தமிழகமே-
விழித் தெழும்பு!
தாய்-
மண் வளத்தை
மீட்க கிளம்பு!

கம்ப்யூட்டர்
கவர்ச்சி போலே
விவசாய
புரட்சி வேண்டும்!

இயற்கையோடு
இசைவாக
புதுமைகளை
புகுத்த வேண்டும்!

இளைஞர்களை
ஈர்க்கும்படி
புது-
வேளாண்மை
இருக்க வேண்டும்!

உழுபவன்
ஏர்ப்பின்னே
முழு-
அரசாங்கமும்
நிற்க வேண்டும்!

இல்லை என்றால்...

இயற்கைக்கு மாறாக
இறக்குமதி செய்கின்ற
வெளிநாட்டு 'விஷ மண்ணை'
வெட்கம்கெட்டு தின்றுவிட்டு
தவணை முறையிலே
நம்-
தலை முறைகள்
சாக வேண்டும்!

எது வேண்டும்?

நண்பேன்டா.........

1‬: ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்,..

'ஏம்மா லேட்',
'தோழி வீட்டிற்கு போயிருந்தேன் பா'...
அப்பா சந்தேகப்பட்டு அவளுடைய 10 தோழிகளுக்கு போன் செய்து கேட்டார், பத்து தோழிகளும் சொன்ன ஒரே பதில்,

'அவ இங்க வரவே இல்லையே'
என்பதுதான்...

ஒரு பையன் வீட்டிற்கு வராமல் காலையில் வந்தான், ஏம்பா நைட்டு வீட்டுக்கு வரல.,
நண்பன் வீட்டுலே தங்கிட்டேன் பா,..

அப்பா அவனுடைய 10 நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டபொழுது, 8 நண்பர்கள் சொன்ன பதில்
"அவன் எங்க கூடதான் தங்கினான்"...

அந்த 2நண்பர்கள் சொன்ன பதில் "இன்னும் அவன் எங்கூட தான் இருக்கான்"
என்பது தான்....

*BOYS FRIENDSHIP IS THE BEST FRIENDSHIP*

நண்பேன்டா... 💪👥👥
: ☺பொண்டாடி கூட நாம் சாப்பிட்ட மீதி🙃 சாப்பாட்டை
🙃சாப்பிட தயங்கும் இந்த காலத்தில் . . .
நாம் சாப்பிடும்போது…ஒரே டிபன் பாக்ஸ்ல
கை ✋போடும் நண்பர்கள்
🙄எல்லாம் தெய்வத்தின்மறு அவதாரமே …..
😠இது என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் 😖 I lv u frnd

எங்கே? எங்கே? எங்கே? எங்கே?

*எங்கே? எங்கே? எங்கே? எங்கே?*
பனையோலை விசிறி எங்கே?
*பல்லாங்குழி எங்கே?*
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
*கோகோ விளையாட்டு எங்கே?*
சாக்கு பந்தயம் எங்கே?
*கில்லி எங்கே?*
கும்மி எங்கே?
*கோலாட்டம் எங்கே?*
திருடன் போலீஸ் எங்கே?
*ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?*
மரப்பாச்சி கல்யாணம் எங்கே?
*மட்டை ரெயில் எங்கே?*
கமர்கட் மிட்டாய் எங்கே?
*குச்சி மிட்டாய் எங்கே?*
குருவி ரொட்டி எங்கே?
*இஞ்சி மரப்பா எங்கே?*
கோலி குண்டு எங்கே?
*கோலி சோடா எங்கே?*
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
*எலந்தை பழம் எங்கே?*
சீம்பால் எங்கே?
*பனம் பழம் எங்கே?*
பழைய சோறு எங்கே?
*நுங்கு வண்டி எங்கே?*
பூவரசன் பீப்பி எங்கே?
*கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?*
நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?
*அரைஞான் கயிறு எங்கே?*
அன்பு எங்கே?
*பண்பு எங்கே?*
பாசம் எங்கே?
*நேசம் எங்கே?*
மரியாதை எங்கே?
*மருதாணி எங்கே?*
சாஸ்திரம் எங்கே?
*சம்பரதாயம் எங்கே?*
விரதங்கள் எங்கே ?
*மாட்டு வண்டி எங்கே?*
மண் உழுத எருதுகள் எங்கே?
*செக்கிழுத்த காளைகள் எங்கே?*
எருமை மாடுகள் எங்கே?
*பொதி சுமந்த கழுதைகள் எங்கே?*
பொன் வண்டு எங்கே?
*சிட்டுக்குருவி எங்கே?*
குயில் பாடும் பாட்டு எங்கே?
*குரங்கு பெடல் எங்கே?*
அரிக்கேன் விளக்கு எங்கே?
*விவசாயம் எங்கே?*
விளை நிலம் எங்கே?
*ஏர் கலப்பை எங்கே?*
மண் வெட்டி எங்கே?
*மண் புழு எங்கே?*
வெட்டு மண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
*பனை ஓலை குடிசைகள் எங்கே?*
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே?
*குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?*
அந்த குளங்களும் எங்கே?
*தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?*
அம்மிக்கல் எங்கே?
*ஆட்டுக்கல் எங்கே?*
மோர் மத்து ?
*கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?*
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
*தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?*
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?
*தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?*
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?
*மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?*
இடுப்பை சுற்றி கட்டிய பணப் பை எங்கே?
*இடுப்பில் சொருகிய சுருக்கு பை எங்கே?*
தாவணி அணிந்த இளசுகள் எங்கே?
*சுத்தமான கிணற்று நீரும் எங்கே?*
மாசு இல்லாத காற்று எங்கே ?
*நஞ்சில்லாத காய்கறி எங்கே?*
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
*எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?*
சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே?
*எங்கே? எங்கே?? எங்கே???*
இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசர பயணம் தான் எங்கே?!?!?!

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்

"கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்"

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!

மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!

மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க...

கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

நாங்க சந்தோஷமா இருக்கோம்.

என் மாமியார் ரொம்ப நல்லவங்க.

நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன்.

என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!

இந்த மாதிரி எல்லா உறவுகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை எளிமையாக தீர்க்கலாம்..!

அதேபோல,  பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...;

கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!; 

என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!

உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!;

உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!!

நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;

மனசுக்குள்ளயும் சொல்லலாம்!!
வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம்.
10 நிமிஷம் சொன்னாப் போதும்.

முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!

நீங்களும் செஞ்சு பாருங்க!!;

பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத் தருகிறார் ஷீலா!!

இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??

இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!

“இது ஒண்ணும் புதியதில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!

மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க.

சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!

‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?

இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!

உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை *""Ora Science""*என்று சொல்வாங்க!!

*எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)*..... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!

உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற *சக்தி கொண்ட ஒரு பொருள்!!!*

கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!

*இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!*

உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி  அதிகரிக்கும்போது; அதுவே  *அதிர்வுகளாக* (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!!

எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!

ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! 

இதுவும் *அறிவியல்தான்!!*

எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்; 

எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; 

விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!

இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!! 

அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! 

அப்படி வங்கினால்,  கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!!

இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!, 

என்கிறார்

டாக்டர் ஜிதேந்திரா!!

"அன்பான வாழ்க்கைக்கு பாரம்பரிய முறைகள் அவசியம்"

"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"

"அன்பான பாரதத்தை உறுவாக்குவோம்"

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

அழிக்க முடியாத உறவு
       " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்உ டனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா,
அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது
தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு
வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித
முன் தொடுப்பும் இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப்
உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை
எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக
மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா
வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல
கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும்
தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது
குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது
வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும்
தாய்மாமனே முன்னிற்பான்.
தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக
உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு
அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே
போகலாம்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை
அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக
தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக
வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால்
என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.
எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ
அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின்
மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான்
கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால்
அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய்
மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை
தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை
கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன்
அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று
அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை
காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும்
அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம்
தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து
மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன
உண்மை...
நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து
இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு
விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட
நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு
கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த
தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க
அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது
அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம்
தெரிந்தது.
நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம்
நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம்
தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம்
குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க
வேண்டும் என்பது என் ஆவா. . .

நண்பேன்டா.........

1‬: ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்,..

'ஏம்மா லேட்',
'தோழி வீட்டிற்கு போயிருந்தேன் பா'...
அப்பா சந்தேகப்பட்டு அவளுடைய 10 தோழிகளுக்கு போன் செய்து கேட்டார், பத்து தோழிகளும் சொன்ன ஒரே பதில்,

'அவ இங்க வரவே இல்லையே'
என்பதுதான்...

ஒரு பையன் வீட்டிற்கு வராமல் காலையில் வந்தான், ஏம்பா நைட்டு வீட்டுக்கு வரல.,
நண்பன் வீட்டுலே தங்கிட்டேன் பா,..

அப்பா அவனுடைய 10 நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டபொழுது, 8 நண்பர்கள் சொன்ன பதில்
"அவன் எங்க கூடதான் தங்கினான்"...

அந்த 2நண்பர்கள் சொன்ன பதில் "இன்னும் அவன் எங்கூட தான் இருக்கான்"
என்பது தான்....

*BOYS FRIENDSHIP IS THE BEST FRIENDSHIP*

நண்பேன்டா... 💪👥👥
: ☺பொண்டாடி கூட நாம் சாப்பிட்ட மீதி🙃 சாப்பாட்டை
🙃சாப்பிட தயங்கும் இந்த காலத்தில் . . .
நாம் சாப்பிடும்போது…ஒரே டிபன் பாக்ஸ்ல
கை ✋போடும் நண்பர்கள்
🙄எல்லாம் தெய்வத்தின்மறு அவதாரமே …..
😠இது என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் 😖 I lv u frnd