Search This Blog

Thursday, June 4, 2020

எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்❓

🌿 *ஊடுபயிர்* 🌾

எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்❓

 🍊 *கொய்யாவில் ஊடுபயிர்கள்* : 

பயறு வகை பயிர்களான பச்சை பயிர் ,உளுந்து,தக்காளி  ,மற்றும் பீட்ரூட் ஊடுபயிர்களாக தொடக்க  காலகட்டங்களில் பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

மேலும் சாம்பல் பூசணி ,வெள்ளரி,அன்னாசி ,பீன்ஸ் ,முட்டைகோஸ் போன்ற பயிர்களை ஊடுபயிர்களாக பயிரிடலாம்.

 🍌 *வாழையில் ஊடுபயிர்கள்* :

வாழையின் ஆரம்பகால வளர்ச்சி நிலையில் ஊடுபயிரிடுவது  எளிது. முள்ளங்கி, காலிஃபிளவர்,முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணை கிழங்கு, சேனைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி வகைகள், நிலக்கடலை செண்டு மல்லி போன்றவை ஊடுபயிராக வாழையுடன் வளர்க்கப்படுகின்றன.
நமது தமிழகத்தில் பாக்கு,தென்னை மரங்களுடன் வாழை பல பயிர் சாகுபடி முறையும் உள்ளது.
தனியே வாழை பயிரிடுவதை விட வெண்டையுடன் சேர்த்து பயிரிடுவது மிக அதிக இலாபத்தையும், வெண்டையை தொடர்ந்து, கொத்தவரை, அவரை போன்றவை நல்ல இலாபம் தரும் ஊடுபயிர்களாகும்.

 🍅 *தக்காளியில் ஊடுபயிர்கள்* :
தக்காளியில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிடுவதால் மூலம் தக்காளியைத் தாக்கும் வெள்ளை ஈக்களை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம்.
மேலும் தக்காளியில் ஊடுபயிராக துவரையை வித்தும் அதிக மகசூல் பெறலாம்.

🌾 *கேழ்வரகில் ஊடுபயிர்கள்* :

கேழ்வரகு பயிரில் இறவை காலங்களில் ஊடுபயிர்களாக வெங்காயம் பயிரிட்டு நல்ல மகசூலை பெறலாம்.
மேலும் மானாவாரி காலங்களில் பச்சைப்பயிறு சாகுபடி செய்து நல்ல மகசூலை பெறலாம்.

🍂 *எள்ளில் ஊடுபயிர்கள்* :

எள்ளில் ஊடுபயிராக பச்சைப்பயறு சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம் 
இதை தொடர்ந்து கோதுமை பயிரை விதைத்து வந்தால் அதிக மகசூலை பெறலாம்.

 🍂 *வெண்டையில் ஊடுபயிர்கள்* :

வெண்டை செடிகள் அதிக அளவு உஷ்ணத்தால் அடிபடாமல் இருக்க வெண்டை செடிகளை சுற்றிலும் கொத்தவரை செடிகளை வளர்க்கலாம்.

 🍆 *பந்தல் காய்கறி பயிரிகளான பாகல் , புடலையில் ஊடுபயிர்* :

பந்தல் வகை காய்கறி பயிர்களில் ஊடுபயிராக  முள்ளங்கி,கீரை வகைகள் அதிகளவில் பயிரிட்டு நல்ல மகசூலை பெறலாம்.

🌺 *மலர்கள் சாகுபடியில் ஊடுபயிர்கள்* :

மலர்கள் சாகுபடியில் ஊடுபயிராக கீரை,மூலிகை பயிர்கள்,காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு நல்ல மகசூலைப் பெறலாம்.
மல்லிகையில் ஊடுபயிர்கள்:
மல்லிகையில் ஊடுபயிராக மூலிகை பயிர்,தர்பூசணி சாகுபடி செய்து நல்ல முறையில் லாபத்தையும்,அதிக மகசூலையும் பெறலாம்.
மரவள்ளி கிழங்கில் ஊடுபயிர்:
மரவள்ளி கிழங்கில் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் ஆமணக்கு,துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

🌼 *செவந்தியில் ஊடுபயிர்கள்* :

சித்திரையில் விதைப்பவர்கள் ஊடுபயிராக வெங்காயத்தையும் சேர்த்து விதைப்பார்கள்.ஒரு வரிசையில் செவ்வந்தி,அடுத்த வரிசையில் வெங்காயம் என விதைத்து 45ம் நாளில் வெங்காயம் அறுவடை ஆகிவிடும்.
பாக்கு ஊடுபயிர்:
மிளகு,கோகோ ,பட்டை,கிராம்பு மற்றும்  எலுமிச்சை.
 

 " *ஊடுயிர் பயிர் எனபது வெறுமனே கூடுதல் வருமானம் என்பதை தவிர்த்து முக்கிய பயிரின் பூச்சி  பாதுகாப்பு, ஊட்டச்சத்துக்களை நிலை நிறுத்தி மற்ற பயிர்களுக்கு பகிர்ந்தளித்தல் ,மண்ணின்  வளம் , இயற்கை சீற்ற பாதுகாப்பு போன்றவைகளை உள்ளடக்கியது.* "
நன்றி அன்புடன் R.அன்பரசு.