Search This Blog

Sunday, September 16, 2018

வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்

*வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்*

*ஜனகண மன பாடல் யுனெஸ்கோ வால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது*

தவறான தகவல்

*பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது*

அது சினிமா செட்..

*குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது*

இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.

*திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்*

உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?

*இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு*

பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத  ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...

*இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்*

ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல  தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?

*இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்*

இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?

*ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு*

போட்டோசாப் வேலை...

*இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்*

இருக்குற டேட்டாவும குறையும் ...

*மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்*

புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?

*இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது*

பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.

*599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்*

அமேசான மூட போறாங்களா?

*குழந்தையைக் காணோம்*

அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு.  கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.

*ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்*

தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?

*இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்*

அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?

*3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு*

எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.

*10 ரூபாய் நாணயங்கள் செல்லாது*

பொய்.

*வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது*

அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.

*டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்*

ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.

*இந்த நடிகர் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூடத் தரவில்லை*

அவன் காசு. அவன் இஷ்டம்.

* நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப் பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு...

இன்னும் இது மாதிரி  நிறைய....

👆👆👆👆👆
"இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க"

இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னே, ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடையவேண்டும்.

எனவே நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவாயில்லை; அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.  இணைய உலகில் மறைந்திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடுவோம்.

*பயனற்ற வாட்ஸப் பதிவுகளால் கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள்-ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்*

பரிதாபமான நிலையில் உள்ளவர்கள் குறித்து வாட்ஸப் பதிவுகளை பகிருங்கள், அவர்களுக்கு ஒரு பகிர்விற்கு இவ்வளவு பைசா கிடைக்கும் என்ற ஏமாற்று பதிவுகளை பார்த்திருப்பபோம்.

இப்படி லட்ச, லட்சமாக
“ Cellphone company ” காரன் எப்படி தருவான், என்பதை சிந்தித்திருக்கிறோமா?

எப்போதாவது நீங்க இந்த பாதிக்கப்பட்டவர் இடம் போய் கேட்டு இருக்கிருக்கிறீர்களா ?

இதன் பின்னணியில் உள்ள செல்போன் நிறுவனங்களின் அயோக்கியதனமான கொள்ளை நடப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக, இதை பதிவை பகிரும் ஒருவருக்கு data Balance ல இருந்து 50 Kb செலவாகும்.

இதை Download செய்து பார்க்கும் , கேட்க்கும் பிறருக்கு Net Card balance லிருந்து
50 KB செலவாகும்.

” ஆக ஒரு “குரூப்” ல் இருக்கும் மொத்த 100 பேரும் பார்க்கும் போது கூட்டி கழிச்சி (100 X 50 Kb = 5000 Kb ÷ 1000 = 5 GB ) பார்த்தா 5 GB (1GB ₹192 X 5 = ₹960) என்று சுமார் ₹1000/- ரூபாய் செலவாகும்.

“ஆக மொத்தம் ரூபாய் ₹1000/- த்தில் 20 ℅ (₹200/- ரூபாய்) இந்திய அரசாங்கத்திற்க்கும் …

” Net Card விற்க்கும் கடை காரனுக்கு 5℅ (₹50/- ரூபாய்) Commission போக ..

“மீதி (₹750/- ரூபாய்) செல்போன் கம்பெக்குத்தான் போகும்.

� இப்படித்தான் Accident ல

# கண்ணு போச்சி,

# காலு போச்சு,

# காது போச்சு,

# குழந்தைக்கு இருதயத்தில ஓட்டை விழுந்திருச்சி,

# குழந்தை வயிற்றில் கத்தி போயிருச்சி,

#தொண்டைக்குள்ளே தொடப்ப கட்டை போயிருச்சின்னும் ,

அப்புறம்  ..

இந்த சாய்பாபா படத்த பாத்த உடனேயே 10 பேர்களுக்கு ஷேர் பண்ணுங்க உடனே நல்ல சேதி வரும் அலட்சிய படுத்தினா ரத்தம் கக்கி சாவிங்க என்று கடவுள்களின் பெயரை சொல்லி ஷேர் செய் நல்லது நடக்கும் இல்லனா கெட்டது நடக்கும்.

என்றும் ,

மேலும் இந்த நெட்ஒர்க் ஷேர் செய்தால் 10 GB 3g இலவசம்.

என்றும்,

இப்படி புதுசு, புதுசா எதையாவது எழுதி இல்லை  பேசி இது மாதிரி “குரூப்” களுக்கு அனுப்புவாங்க.

😔 இது மாதிரி சோகமாக பேசி இதை நீங்கள் குறைந்தது 10 Group’s க்கு அனுப்பு என்பான்.

“ஆக ஒரு ” குரூப்” ல் 100 பேருக்கு அனுப்பும் போது “Sim Card Company” காரனுக்கு சுமார் ₹ 750/- ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

இதுபோல்

01 X 10= 10/-
10 X 10= 100/-
100 X 10= 1000/-
1000 X 10= 10,000/-
10,000 X10=1,00,000/-

பேருக்கு என்று அனுப்பி கொண்டே போனால்
(1,00,000 X 50 KB = 50,00 000 GB X ₹192= ₹96,00,00,000/- ÷ 25℅ -₹72,00,00,000

( கிட்டத்தட்ட 72 கோடி ரூபாய் வரை ) எவ்வளவு காசு கம்பெனி காரனுக்கு கிடைக்கும் என்று கூட்டி கழிச்சி பாருங்க தம்பி, தங்கைகளா …!?

 ஏர்டெல்,

 ஏர்செல்,

 டாடா,

 டொக்கோமோ,

 வொடாபோன்,

 ரிலையன்ஸ்

இன்னபிற
“Sim Card Company” முதலாளிகளுக்கு …
காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

*நமக்கோ அல்லது பாதிக்கப்பட்டவங்களுக்கோ -10 பைசா கூட போகாது ..*

💰 இதற்காகவே இதுக்கென்றே
“Sim Card Company” காரன்கள் ஆட்களை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளான்கள்.

😔 இதில் வருத்தபட வேண்டிய விசயம் என்னவென்றால் கடைசியில் உண்மை செய்தி எது, பொய் செய்தி எது என்று பிடிபடாமல் போய் அனைத்தையும் மக்கள் அலட்சிய படுத்தி விடுவார்கள். )

*தம்பிகளா இனிமே உங்கள் நண்பர்களுக்கு “குரூப் ” களுக்கு இது மாதிரியான ( பொய் ) செய்திகளை பதியும் முன்பு யோசனை செய்து விட்டு அப்புறமாக பதிவிடவும்.*

இது போன்ற செய்திகளை பதிவிடுவோரை குழுவில் இருந்து நீக்குவதும் பயனளிக்க கூடியது.

இந்த செய்தி share பண்ணறதால எனக்கு 50 kb போனாலும் பரவாயில்ல.

*திருந்துங்கப்பா*

Tuesday, July 24, 2018

Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

Best IAS Websites for UPSC Civil Services Exam Online Preparation

1. *insightsonindia.com*
2. *clearias.com*
3. *Mrunal.org*
4. *gktoday.in*
5. *currentaffairsonly.com*
6. *cleariasexam.com*
7. *IASexamportal.com*
8. *visionias.wordpress.com*
9. *swapsushias.blogspot.in*
10. *iaspassion.com*
11. *iasscore.in*
12. *iaskracker.com*
13. *jagranjosh.com*
14. *UPSCguide.com*
15. *CivilServiceIndia.com*
16. *ias100.in*
17. *jeywin.com*
18. *civilsdaily.com*
19. *onlinegk.com*
20. *iasaspirants.com*
21. *iaspaper.in*
22. *iasexams.com*
23. *tcyonline.com*
24. *testfunda.com*
25. *byjusclasses.com*

IAS Forum Websites
1. *iasforums.com*
2. *upscforums.com*
3. *forumias.com*
4. *indianofficer.com*
5. *interviewprep4ias.com*
6. *upscdiscussions.com*

IAS Toppers Blogs
1. *thesupermanreturns.wordpress.com*
2. *rijubafna.com*
3. *youtube.com/user/unacademy*
4. *lohitmatani.wordpress.com*
5. *iasdream.com*
6. *jhinujha.wordpress.com*

Useful Government Websites For Civil Service Preparation *
1. *ncert.nic.in* – Download NCERT Texts as PDF.
2. *nios.ac.in* – Download NIOS Online Materials.
3. *egyankosh.ac.in* – Download IGNOU Books.
4. *yojana.gov.in* – Download Yojana and Kurukshetra Magazines.
5. *upsc.gov.in* – Official Website of UPSC.
6. *pib.nic.in* – Press Information Bureau Website, for government updates.
7. *prsindia.org* – PRS Website for tracking bills in Parliament.
8. *idsa.in* – IDSA website for Defense and Foreign relations.
9. *gatewayhouse.in* – Indian Council for Global relations.
10. *envfor.nic.in* – Ministry of Environment and Forests.
11. *mea.gov.in* – Ministry of External Affairs.
12. *indiabudget.nic.in* – Download Budget and Economic Survey.
13. *ptinews.com* – Press Trust of India.
14. *pdgroup.upkar.in* – Pratiyogita Darpan Magazine.
15. *ibef.org* – India Brand Equity Foundation for economy and business.
16. *vikaspedia.in* – Knowledge initiative by InDG.
17. *makeinindia.com* – Make in India initiative for manufacturing related info.

Sunday, June 17, 2018

10ம்வாயப்பாடு முதல்--99-ம் வாய்ப்பாடு வரை பள்ளிகள் சொல்லிக்கொடுக்காத இந்த வேதிக் முறையை உங்கள் குழந்தைகளுக்கு தயவுசெய்து சொல்லிக்கொடுங்கள்

10ம்வாயப்பாடு முதல்--99-ம் வாய்ப்பாடு வரை பள்ளிகள் சொல்லிக்கொடுக்காத இந்த வேதிக் முறையை உங்கள் குழந்தைகளுக்கு தயவுசெய்து சொல்லிக்கொடுங்கள்
I didn't know this. Because it was not taught to us in school.

How to write Table of any two digit number?

For example Table of  *87*

First write down *table of 8 then write down table of 7 beside it*

  8            7                    87
16         14    (16+1)    174
24         21    (24+2)    261
32         28    (32+2)    348
40         35    (40+3)    435
48         42    (48+4)    522
56         49    (56+4)    609
64         56    (64+5)    696
72         63    (72+6)    783
80         70    (80+7)    870

Now table of 38

  3         8                   38
  6       16   (6+1)      76
  9       24   (9+2)    114
12       32   (12+3)  152
15       40   (15+4)  190
18       48   (18+4)  228
21       56   (21+5)  266
24       64   (24+6)  304
27       72   (27+7)  342
30       80   (30+8)  380
33       88   (33+8)  418
36       96   (36+9)  456

Now table of 92

    9         2                     92
  18         4                  184
  27         6                  276
  36         8                  368
  45       10      (45+1)460
  54       12      (54+1)552
  63       14      (63+1)644
  72       16      (72+1)736
  81       18      (81+1)828
  90       20      (90+2)920
  99       22      (99+1)1012
108       24      (108+2)1104

This way one can make Tables from10 to 99

Share & teach children

This is Vedic Mathematics!!..sha

Thursday, June 14, 2018

விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்

விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்

1.வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய www.tnagrisnet.gov.in

2.தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.tnau.ac.in

3. தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய www.tnhorticulture.tn.gov.in

4. விதைகள் தொடர்பான தகவல்கள் அறிய www.seedtamilnadu.com

5. வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.aed.tn.gov.in

6.வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள www.l3fpedia.com

7. அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய www.tnocd.net

Friday, May 18, 2018

வாழும் காலம் வரை அன்பை விதைப்போம் அறத்தை வளர்ப்போம் !

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.🤔🤔🤔
----------------------------------------
`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!😊
----------------------------------------
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!☹😕
----------------------------------------
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப்'  பார்க்கிறார்கள்.😫 #ஐடி பூங்காக்கள்.
----------------------------------------
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.😞😞😞
----------------------------------------
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.😜😜
----------------------------------------
மிடில் க்ளாஸ் வாழ்க்கை  எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும். 😒😒😣
----------------------------------------
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு. 🤣🤣🤣
----------------------------------------
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்😛
----------------------------------------
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.😍😍
----------------------------------------
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!😃😄
----------------------------------------
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை... 😭😭😭
----------------------------------------
வாழும் காலம் வரை
அன்பை விதைப்போம்
அறத்தை வளர்ப்போம்...🤝👍