போதாயன மகரிஷி:
மகரிஷி போதாயனர்
போதாயன மகரிஷி கங்கா குலத்தவரின் ஆதி குருவாவார். இவர் இயற்றிய சாஸ்திரங்கள் மிக தொன்மையும் பழமையும் உடையவை. இவர் யஜூர் வேத சாஸ்திர அடிப்படையில் பயின்றவர். இவர் தர்மம், கணிதம் , அன்றாட கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என் பல விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். இவரின் நியம விதிகளை பிராமணர்களில் பல வகை ஐயர் - ஐயங்கார் களும் கொங்கு நாட்டு பிராமணர்களும் குருக்களும் பின்பற்றுகிறார்கள். Pythagoras theorem மற்றும் Pi என்று இன்றைய அறிவியல் உலகம் சொல்லும் சூத்திரத்தை அன்றே வகுத்தவர். இவரின் கணித சூத்திரங்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்டது.
போதாயன தர்ம சூத்திரத்தின் பகுதி
கங்கா குல முதல்வனான மரபாளனுக்கு சகல வித்தைகளையும் பயிற்றுவித்தவர். போதயனர் மரபாளனுக்கு கற்பித்த விஷயங்கள் மரபாள சூடாமணி என்னும் மிக பழமையான நூலில் தொகுக்கப்பட்டது.
மரபாளனுக்கு போதாயனர் உபதேசம்
மரபாள புராணத்தை அடிப்படையாக கொண்டு வீராச்சி மங்கலம் கந்தசாமி கவிராயர் வேளாள புராணம் என்னும் நூலை இயற்றினார்.
வேளாள புராணம் - மரபாள புராணத்தை தழுவி எழுதப்பட்டது
பங்குனி மாத அமாவாசை போதாயன அமாவாசை எனப்படுகிறது. இந்த அமாவாசையானது, பாரத போருக்கு களப்பலி கொடுக்க வேண்டி, ஸ்ரீ கிருஷ்ணர் சூர்ய சந்திரரை சந்திக்க வைத்து ஏற்ப்படுத்திய அமாவாசையை அனுசரித்து வருவதாகும்.
வரலாற்று திரிப்பு சூழ்ச்சி:
கிறிஸ்தவ கல்லூரியான லயோலாவில், பாதிரியார் ஜகத் கஸ்பர், கனிமொழி உட்பட பல கிறிஸ்தவ மற்றும் பல்துறை அறிஞர்கள் (!!) சேர்ந்து சங்கம் 4 என்ற நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்தனர்.
அதில் கொங்கு வெள்ளாளர் இடப்பெயர்வு என சிந்து சமவெளியில் இருந்து வந்ததுபோல காட்ட முயற்சி எடுக்கின்றனர். தமிழ் என்ற அடைமொழியால் முகமூடி போட்டு பல்வேறு இயக்கங்கள் மறைமுகமாக இந்த சதிவேலைகளை செய்து வருகிறது. நம் வரலாறு, புராண இதிகாசங்கள் முதல் நம் மங்கள வாழ்த்து, போதாயன சூத்திரம் உட்பட பல நூல்களும் நாம் கங்கை கரையில் இருந்து இடம் பெயர்ந்ததையும், அதனாலேயே நம்மை கங்கா குலத்தார் என்று அழைக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது. (மங்கள வாழ்த்து: "கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை..")
ராமாயணம்:
சூர்ய வம்ச தோன்றலான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் சரித்திரம் ஸ்ரீ ராமாயணம் என்று பல்வேறு மொழிகளில் பல்வேறு நாடுகளில் போற்றி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. பர்மா, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அவர்கள் மொழிகளில் இக்காவியம் மக்களால் படிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு அக்காலத்திலேயே ராமாயணம் செல்ல காரணம் தமிழ் வேந்தர்களான சோழர்களே.
சோழர்களுக்கு ராமாயணம் தெரியவர காரணம் தமிழில் கம்பர் இயற்றிய கம்பராயாமணம். கம்பராமாயணம் செய்விக்க கம்பரை ஆதரித்து செயமேற்கொண்டவர் கங்கா குல கொங்க வெள்ளாளர் மரபில் வந்த சடையப்ப வள்ளல் அவர்கள். கங்கா குலம், ஸ்ரீ ராமர் பிறந்த சூர்ய வம்சத்தில் இருந்து கிளைத்தது!