Search This Blog

Sunday, June 26, 2016

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும்

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.

அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.

அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.

மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.

ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

எல்லாம் சிவமயம்
எல்லாம் இன்பமயம் .

மறக்காமல் இதை பகிருங்கள்..
இதனை share செய்யுங்கள்.. மற்றவர்களும் பயணடையட்டும்..

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள

கதை சிறுசு, கருத்தோ பெரிசு
~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
°•○●
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
°•○●
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,
♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
°•○●
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,
அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°•○●
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
*
*
*
மனசை தொட்ட பதிவு. —

Saturday, June 25, 2016

என்ன கற்றுக் கொண்டோம்?... என்ன கற்றுக் கொடுக்கிறோம்?...

"என்ன கற்றுக் கொண்டோம்?...
என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.

ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

நல்லதையே கற்றுத் தருவோம்...
அர்த்தமுள்ள வாழ்வுக்கு...🌷

Friday, June 24, 2016

வாழ்வின் எதார்த்தம்

🌹 *வாழ்வின் எதார்த்தம்* 🌹

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,

🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!

🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

🌴பாவம் எல்லோரும்
tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

🌴இதோ நாம் எதிர்பார்த்த
அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

🌴விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,

🌴சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை

🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான்,
'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!

🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

🌴ஒருபக்கம் தாரை தப்பட்டை
இன்னொரு பக்கம்
மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!

🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!
கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும்
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

🌴இதில் இன்னொரு சிறப்பு செய்தி என்னன்னா
நாம் இறந்ததை யாரோ
Facebook ல் போட
மொத்தம்
4000 likes(விருப்பங்கள்)
அடப்பாவிகளா,
அப்போ அத்தனைபேரும் எப்போ போவான்னு wait பண்ணிட்டே இருந்தீங்களா?!

🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!

🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!

🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

🌴அர்த்தமுள்ள
வாழ்க்கையை வாழ்வோம்❗

*வாழ்வின் எதார்த்தம்*

🌹 *வாழ்வின் எதார்த்தம்* 🌹

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,

🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!

🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

🌴பாவம் எல்லோரும்
tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

🌴இதோ நாம் எதிர்பார்த்த
அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

🌴விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,

🌴சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை

🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான்,
'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!

🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

🌴ஒருபக்கம் தாரை தப்பட்டை
இன்னொரு பக்கம்
மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!

🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!
கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும்
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

🌴இதில் இன்னொரு சிறப்பு செய்தி என்னன்னா
நாம் இறந்ததை யாரோ
Facebook ல் போட
மொத்தம்
4000 likes(விருப்பங்கள்)
அடப்பாவிகளா,
அப்போ அத்தனைபேரும் எப்போ போவான்னு wait பண்ணிட்டே இருந்தீங்களா?!

🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!

🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!

🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

🌴அர்த்தமுள்ள
வாழ்க்கையை வாழ்வோம்❗

"வாழ்க்கை வாழ்வதற்கே"

👌�👌�👌�👌�👍�👍�👌�👌�👌�👌�

         *"படித்ததில் பிடித்தது"*
      ~~~~~~~~~~~~~~

*"உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?"*

தஞ்சையை ஆண்ட "மன்னர் இராஜராஜ சோழனுக்கு" ஒரு சந்தேகம் எழுந்தது

*"உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது"*

என்பதே அவர் கேள்வி.??

மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம்.

*அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை"*

அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்,

யாருடைய *"பொருள்"* அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ,

அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு,

என அறிவிக்கப்பட்டது.

மக்களும் யோசித்து,

*"மகிழ்ச்சியை தரும் பொருட்கள்"*

எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ,

ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.

மறுநாள்,

"மன்னர் ராஜராஜ சோழர்" கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார்.

*"மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது"*

ஒவ்வொரு *"பொருட்களாக"* அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.

👇�

* முதலில்,

சிறிய அளவு *"பொன்"* இருந்தது.

அதன் கீழே,

“செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.

ஆனால்,

செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் ,

செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?”

அதனால் இது சரியான விளக்கம் அல்ல.”

என அதை நிராகரித்தார் மன்னர்.

👇�

** அடுத்ததாக,

*"இசை கருவி"* இருந்தது.

அதன் கீழே,
“இசையே மகிழ்ச்சி தரக்கூடியது”
என எழுதப்பட்டிருந்தது.

ஆனால்,

காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?

இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.

👇�

*** அடுத்து,

*"அழகான மலர்கள்"* இருந்தன.

இவை,

கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?.

அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”

👇�

**** அடுத்து,

*"இனிப்பான பலகாரங்கள்"* இருந்தது.

“நோயாளிகளுக்கு  எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?”

என்று கூறி அதனையும் நிராகரித்த ,

*"மன்னர் இராஜராஜ சோழர்"*

👇�

அடுத்தாக ,

ஒரு பெரிய

   🙏� *"சிவலிங்கத்தின்"* 🙏�

அருகில் வந்தார்.

அந்த . . .

   🙏� *"சிவலிங்கத்தின்"* 🙏�

கீழே ஒரு சிற்பம்.

அதில் ஒரு தாய்,

பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த சிற்பத்தின் கீழே,

        *"அன்பே சிவம்”*

என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்
மன்னர்.

வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி,

""மன்னரின்"" முன் அழைத்து வரப்பட்டார்.

“நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா?

இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.”
என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.

“அரசே நான் ஒரு சிற்பி,

இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான்.

   🙏� *"சிவலிங்கத்தின்"* 🙏�

கீழே ஒரு பெண்மணி,

            *"அன்போடு"*

ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.

இந்த உலகில் ,

              *"அன்பை"*

மட்டும்தான்,

"கண் தெரியாதவர்ளும்,
காது கேட்காதவர்களும்,
வாய் பேச முடியாதவர்களும், உணர முடியும்"

அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும்,

           *"அன்பைதான்"*

எதிர்பார்க்கிறார்கள்.

              *"அன்பு"*

மட்டுமே உலகில் சிறந்தது.

        *"அன்பிருந்தால்"*

எதிரியையும் நண்பனாக்கும்.

                 *"அன்பு"*

இல்லையெனில்,

நண்பனையும் எதிரியாக்கும்,

உலகில் சிறந்ததும்,

அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் 

              *"அன்பு"*

  *"அன்புதான் இறைவன்"*

அதனால்தான்,

     🙏� *"சிவலிங்கத்தின்"* 🙏�

கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து,

    🙏� *”அன்பே சிவம்”* 🙏�

என்று எழுதி வைத்தேன்.”
என விளக்கினார் சிற்பி.

இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.

உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற  என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.

நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள் என்று கூறி ,

ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து,

ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.

*"அன்புக்கு"* கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?.

*"அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது"*

     🙏 *"�அன்பே சிவம்"* 🙏�

     *"வாழ்க்கை வாழ்வதற்கே"*

👌�👌�👌�👌�👍�👍�👌�👌�👌�👌